அமெரிக்க அதிபர் ரஷ்ய தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதாக வைரல் ஆகிய தகவல் உண்மை இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது அக்டோபர் இரண்டாம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பிறகு இருவரும் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அதிபர் டிரம்ப் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பை சரி செய்ய ரஷ்ய தடுப்பு மருந்தை பயன்படுத்தி வருவதாக அவரே பதிவிட்ட ட்விட் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில், இன்று காலை நான் ரஷ்யா கண்டறிந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டேன். இதனை மக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது மிகவும் பாதுகாப்பானது. அதில் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு உண்மையை ஆய்வு செய்ததில், வெளியான அந்த பதிவு போலி என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகளில் வைரல் பதிவு எதுவும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் ரகசிய தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதாக வைராக்கிய தகவல் உண்மை இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.