Categories
உலக செய்திகள்

ரஷ்ய ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்…. அடியோடு அழிக்கப்பட்ட இராணுவத்தளம்…. உக்ரைனில் பரபரப்பு….!!

உக்ரேனில் ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரேன் தலைநகரான கீவ்வில் புரோவரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கீவ் அருகே உள்ள ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் “இரவு நேரத்தில் துல்லியமாக ஏவுகணைகள் மூலம் புரோவரி பகுதியில் இருந்த வெடிமருந்து தொழிற்சாலையை தாக்கி அழித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் சில உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக புரோவரி மேயர் இகோர் சபோஷ்கோ தெரிவித்துள்ளார். மேலும் சமீபகாலமாக தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள உக்ரேன் ராணுவத் தளவாடங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

Categories

Tech |