ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, சாகி ராணுவ விமான தளம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நிலை கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் நேற்று தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
ஆனால் அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ விமான தளத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் (சுமார் மூன்று மைல்) சுற்றளவில் அதிகாரிகள் அந்த பகுதியை சீல் வைத்தனர். உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் அதை உக்ரைன் தரப்பு உறுதிபடுத்தவில்லை. ரஷ்ய தரப்பும் அவ்வாறான செய்திகளை மறுத்துள்ளது.