Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமானம் சிறைபிடிப்பு…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ரஷ்யா உடன் தொடர்புடைய ஜெட் விமானத்தினை பறக்கவிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்து இருப்பதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்து உள்ளார். லண்டன் விமான நிலையத்தில் இருந்து குறித்த ஜெட் விமானத்தை அங்கு இருந்து புறப்படவிடாமல் பிரித்தானிய போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உடன் தொடர்பில் உள்ள விமானங்களுக்கு பிரித்தானியா விதித்திருக்கும் தடையினை ஜெட் மீறியதாஎன்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அந்த விமானமானது ரஷ்ய தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை நடந்து வருவதால் ஜெட் உரிமையாளரின் பெயரை பிரித்தானியா அதிகாரிகள் வெளியிடவில்லை. இது தொடர்பாக பிரித்தானியா போக்குவரத்துதுறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவின் தொழில் அதிபருக்கு சொந்தமான மற்றொருஜெட் பிரித்தானியா வான்வெளியில் பறக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தும் போது புடினால் கோடி கோடிகளை குவித்தவர்கள் சொகுசாக வாழ்வதை எங்களால் வேடிக்கை பார்க்க இயலாது என்று கிராண்ட ஷாப்ஸ் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் மீது பிரித்தானியா உட்பட மேற்கத்திய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் ரஷ்யாவின் தொழில் அதிபருக்கு சொந்தமான 2 தனியார் ஜெட் விமானங்கள் பிரித்தானியாவில் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |