நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகும் ‘ருத்ரன்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் ,இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது . அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படம் ‘ருத்ரன்’ . இந்தப் படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
Thank you master:) looking forward:) https://t.co/DpYbl9YhXs
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 31, 2020
இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ருத்ரன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது . நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் தற்போது, பத்துத்தல, இந்தியன் 2, குருதி ஆட்டம், பொம்மை , ஓமண பெண்ணே ஆகிய படங்களை வைத்துள்ளார் .