Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’… ஷூட்டிங் எப்போது தெரியுமா?…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ரஜினியின் ஆசியோடு 'சந்திரமுகி 2': பி.வாசு - லாரன்ஸ் கூட்டணி | chandramukhi 2  - hindutamil.in

பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 2022-ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது.

Categories

Tech |