வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.