ராகுல் காந்தியினுடைய ஆறுமாத கால சாதனைகளாக ஒரு பட்டியலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டிருக்கின்றார்.
காங்கிரஸ் கட்சியுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா காலத்தில் பாரதிய ஜனதா அரசினுடைய சில சாதனைகளை பட்டியலிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தகைய பதிவில் “கொரோனா பிரச்சனையில் அரசின் சாதனைகள்” என குறிப்பிட்டு அதன் கீழ் பல்வேறு சாதனைகளை வரிசைப்படுத்தி உள்ளார். பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், எனவும் மார்ச்சில் மத்தியபிரதேச அரசினை வீழ்த்தியது, ஏப்ரலில் மக்கள் அனைவரையும் மெழுகுவர்த்தி ஏற்ற செய்தது, மே மாதத்தில் அரசினுடைய ஆறாவது வருட கொண்டாட்டம், ஜூனில் பீகார் மெய்நிகர் பேரணி, ஜூலையில் ராஜஸ்தான் அரசினை வீழ்த்தக்கூடிய முயற்சி என பல சாதனைகளை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு ‘தன்னிறைவு பெற்றுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ராகுல் தினந்தோறும் டுவிட்டரில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர்களில் மட்டுமே வெளியிடக் கூடிய அளவிற்கு காங்கிரஸ் கட்சியானது சுருங்கிவிடும் என்று நான் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி முழுமையாக செயல்படவில்லை என்று மாநிலங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியானது பல்வேறு முறைகளில் மத்திய அரசை தாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் அதில் எத்தகைய வெற்றியும் ஏற்படப்போவதில்லை. மேலும் ராகுல் காந்தியுடைய சென்ற ஆறுமாத கால சாதனைகளை குறித்து நான் கூறுகிறேன். சென்ற பிப்ரவரி மாதத்தில் ஷாகீன்பாக் மற்றும் பிற கலவரங்கள், மார்ச்சில் சிந்தியா மற்றும் மத்திய பிரதேச அரசு கை விட்டு சென்றது, ஏப்ரலில் தொழிலாளர்கள் அனைவரையும் தூண்டி விட்டது, மே மாதத்தில் நடந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை தழுவியது மற்றும் ஆறாவது ஆண்டு தினம், ஜூனில் சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியது, ஜூலையில் ராஜஸ்தானில் கட்சி அழிந்தது போன்ற பல்வேறு செயல்களை சுட்டிக்காட்டி பட்டியலிட்டிருக்கிறார் ஜவடேகர்.