Categories
அரசியல்

ராகுலுக்கு அனுபவம் இல்லை…! பதவிக்கு வர விடமாட்டேன்…. காங்கிரசுக்குள் அடுத்த பூகம்பம் …!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய  அம்ரிந்தர் சிங், பஞ்சாப்  மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து என்றும், வரப்போகும் சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்  என்றும் அம்ரிந்தர் சிங் கூறினார்.

மூன்று வாரங்களுக்கு முன்பாக தான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு  சோனியா காந்தி தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்த அமரீந்தர் சிங் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி அனுபவம் அற்றவர்கள் என தெரிவித்ததாக கூறிய அவர், தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்றார்.

Categories

Tech |