Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலுடன் பேரணியில் இணைந்த கனிமொழி…!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும்,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும்,  2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும்  நடைபெறுகிறது.

150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை நாடு முழுவதும் 3500 கிலோமீட்டர் நடைபெற்று, காஷ்மீரில் முடிகிறது. இந்த நடைபயணமானது இன்று டெல்லியில் தொடங்கி இருக்கிறது. இந்த நடைபயணத்தில் தான் திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளரும்,  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு இருக்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடை பயணத்தை திமுகவினுடைய தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்த நிலையில்,  தற்போது டெல்லியில் நடைபெற்று இருக்கக்கூடிய நடைப்பயணத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும்,.  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு  யாத்திரையில் ராகுல் காந்தி உடன் நடந்து கொண்டு இருக்கின்றார்.

Categories

Tech |