Categories
அரசியல்

ராகுல் ஏன் பிரதமர் ஆகல….? சோனியா முடிவுக்கு காரணம் என்ன….? ஒபாமா கூறிய பதில்…!!

சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க வைக்காததற்கான காரணத்தை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்

ராகுல் காந்தி பற்றி ஒபாமா குறிப்பிட்ட கருத்து சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த சமயத்தில் பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க பாரதிய ஜனதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பதற்றமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். எனவே வேறு ஒரு நபரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. அச்சமயத்தில் ராகுலை பிரதமராக பொறுப்பேற்க வைக்கலாம் என கட்சியில் சிலர் கூறினர்.

ஆனால் சோனியா மறுப்பு தெரிவித்து மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார். இதற்கான காரணத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி பிரதமராக இல்லை என்றால் அவருக்கு எந்த ஒரு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் இருக்காது என்ற காரணத்திற்காகவும் அரசியலில் தனது மகன் ராகுல் காந்தியைக் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்.

மேலும் ராகுல்காந்தி பதட்டமான மனநிலை கொண்டவர். அவர் ஒரு மாணவரை போன்று அரசியல் கொள்கைகளை மனப்பாடம் செய்ய முயற்சித்தார்” என்று ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இது இந்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனது கணவர் மற்றும் மாமியாரை பயங்கரவாதத்திற்கு சோனியாகாந்தி பறிகொடுத்தார். எனவே ஒபாமா சொல்வதைப் போல ராகுல் காந்தியின் நலன் கருதி அத்தகைய முடிவை எடுத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

Categories

Tech |