Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை… நடிகை பூஜா பட் பங்கேற்பு…!!!!!

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்றுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி நடைபயணம் சென்று வருகின்றார். இந்த நடைபயணமானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அதன் பின் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான பூஜா பட் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்ராவில் சிறிது நேரம் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் இந்தியா ஒற்றுமை யாத்திரை ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாமல் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இன்று காலை யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.

Categories

Tech |