Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி-க்கு சொத்து எழுதி வைத்த புஷ்பா பாட்டி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

டேராடூனை சேர்ந்த புஷ்பா முஞ்சியால் என்ற 78 வயது மூதாட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் தங்க நகைகளை ராகுல் காந்தியின் பெயர் என்று உயில் எழுதி வைத்திருக்கிறார். ராகுல் காந்தியும் அவரின் கொள்கைகளும் இந்த நாட்டிற்கு தேவை. அவரின் செயல்பாடு மற்றும் கருத்துக்கள் என்னை மிகவும் ஈர்த்தன. அதனால் தான் என்னுடைய சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்து விட்டேன் என புஷ்பா பாட்டி கூறியுள்ளார். இவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மூதாட்டி புஷ்பா தன் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் அளித்து, ராகுல் காந்தி பெயரில் உயிலை சமர்ப்பித்து, தனக்குப் பிறகு, தன் சொத்துகளை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |