நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தேர்தல் கமிஷன் வந்து இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். எல்லா மத வழிபாட்டு தளங்களிலும்…. குறிப்பாக சர்ச்சுகளில், மசூதிகளிலும், ஜமாத்களிலும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களிலும், எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிராகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்…. மத அடிப்படையில் மத குருமார்களை பிரச்சாரம் செய்கின்றார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதன் மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி மீது நான் தேர்தல் அதிகாரி இடத்திலேயே நிச்சயமா புகார் கொடுக்க போறேன். ராகுல் காந்தியின் உடைய வருகை தென்மாவட்டத்தில் சர்ச்கள் பின்னணியில் இருந்து தான் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். கிறிஸ்தவ கல்லூரி நிறுவனத்தில் தான் எல்லாமே நடந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இப்போ ரோமன் கத்லிக் காங்கிரஸ் கமிட்டி ஆக மாறிவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை அவங்கதான் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்.
ராகுல் தெரிந்தே செய்கிறாரா ? இல்லை தெரியாமல் செய்கிறாரா ? அப்படிங்கறத தேர்தல் கமிஷன் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கணும். இப்படி போய் குழந்தைகள் கூப்பிட்டு, பள்ளி மாணவர்களை…. ஸ்கூல் பிரின்செசை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக்கூடாது. தேர்தல் கமிஷன் பயன்படுத்தலாம், இவங்க கட்சி பிரச்சார பணிக்கு பயன்படுத்தக் கூடாது. கலந்துரையாடல் என்ற போர்வையில் கட்சி பிரசாரத்தை நடத்துகிறார்கள். எனவே இவர் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்.