ராகுல்கந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய தலைவர் தேவை என்று இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இவ்வாறு கடிதம் எழுதியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்பி அவர்கள் தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’ வில் ராகுல்காந்தி காங்கிரசுக்கு தலைமை ஏற்பதை தடுப்பது அக்கட்சியை அழித்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் இந்திய பிரதமர் மோடிக்கு நிகரான வலிமையான தலைவர்கள் காங்கிரஸில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அந்த பத்திரிக்கையில் அவர் கூறியதாவது; காந்தி குடும்பத்தில் அல்லாதவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பது நல்ல திட்டம் தான். எனினும் ராகுல்காந்தியை தடுப்பதில் மும்முரமாக இருப்பது கட்சியை சீர்குலைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் அந்த கட்சியின் அழிவுக்கும் அது வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடிதம் எழுதியுள்ள 23 தலைவர்களில் ஒருவருக்கு கூட தலைமையேற்கும் தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடு முழுவதும் விதவிதமான முகமூடியுடன் மறைக்கப்பட்டு உள்ளது. அந்த முகமூடிகள் எல்லாம் கலைக்க பட்டால் காங்கிரஸ் கட்சியும் வலுவான கட்சியாக திகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.