Categories
அரசியல்

ராகுல் காந்தி திடீர் வெளிநாட்டு பயணம்…. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக இந்தியா திரும்புவார் என எதிர்பார்ப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெல்லாட்க்கும் சச்சின் பைலட்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் இணைந்து பேசிய சமரச பேச்சினை தொடர்ந்து இருவரும் இணைந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் மற்றும் சச்சின் பைலட் இருவரும் இணைந்து சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மந்திரிசபையை விஸ்தரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்கு ராகுல்காந்தி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதனாலும் அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாலும் அவர் இந்தியா திரும்பிய பிறகு விஸ்தரிப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அங்கும் இதே போல் கோஷ்டி மோதல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |