Categories
மாநில செய்திகள்

ராகுல் காந்தி நடப்பதனால் நடக்கப்போவது என்ன? … சீமான் விமர்சனம்….!!!!

மகாகவிபாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டும், இம்மானுவேல் சேகர்ன் நினைவு நாளையொட்டியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழ் தேசிய இனமக்கள் எழுச்சியுற்று, தமிழ் தேசிய அரசியல் இதுவரையிலும் இந்த நிலத்தில் எங்களுடைய தாத்தாக்கள் மா.பொ.சி., சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.வெ.விசுவநாதம், அண்ணல் தங்கம், மறைமலை அடிகள், இவர்கள் எல்லாம் முன்னெடுத்ததைத் தாண்டி, இந்த தலைமுறை பிள்ளைகள், குறிப்பாக பிரபாகரன் பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்தபின் பேரெழுச்சியாக பெரும் வளர்ச்சியாக வளர்ந்து வருகிறது.

அதற்காக தான் இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் திரும்ப திரும்ப திராவிடம், திராவிட மாடல் என பேசுகின்றனர். அவற்றிற்கு காரணம் நாங்கள்தான். இதன் காரணமாக நாங்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். ஆகவே திராவிடமாடல் புத்தகம் வந்தால் நானும் வாங்கிப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் எங்கே இருக்கிறது..? சொந்த தொகுதியில் நின்று அவரால் வெல்லமுடியவில்லை.

மஹ்/.தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் தோளில் ஏறிக் கொண்டு அவர்கள் தயவில் வாக்குக்கு பணம் கொடுத்து வென்று இங்கு இருக்கின்றனரே தவிர்த்து, வேறு எங்கு இருக்கின்றனர். காங்கிரஸ் எதிர்க் கட்சியாக எங்கு இருக்கிறது. எதிர்க் கட்சி என்பது எத்தனை இடங்கள் வென்று உள்ளே சென்று இருக்கிறோம் என்பது அல்ல. என்னவாக இயங்குகிறோம் என்பது தான். ஆனால் அவர்கள் இயங்குவது போல் தெரியவில்லையே. ராகுல்காந்தி நடப்பதனால் என்ன நடக்கும்..? 50 வருடங்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை 5 மாதம் நடந்து கொண்டு வந்துவிடுவாரா..? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |