Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி புகைப்படம்…. தலைகீழாக பதிவிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி…. காரணம் என்ன?….!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ராகுல்காந்தி, அங்கு வழிபாடு நடத்தி அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஓம்காரேஷ்வரர் கோவில் குருக்கள், ராகுல்காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்து இருந்தனர்.

இதனிடையில் இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய ராகுல்காந்தியின் புகைப்படத்தை தலைகீழாகப் பதிவிட்டு இப்போது சரியாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |