காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் நடைபயணத்திற்கு தெலுங்கானா சென்று நாள் முழுக்க ராகுலுடன் நடந்தார் துரை. வைகோ. 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை அவர் குறிவைத்திருக்கிறார்.
ஆனால், ராகுலுக்கு நெருக்கமான மாணிக் தாகூரின் சிட்டிங் தொகுதி அது. விருதுநகரை தனக்கு விட்டுக்கொடுக்குமாறு ராகுலை வலியுறுத்தவே துரை நடைபயணத்தில் பங்கேற்றதாக செய்தி வெளியானது. ஆனால், துரை அதனை மறுத்துள்ளார்.