ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்ஆண்டுதோறும் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் தெப்பக்குளத்திற்கு முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ராகு, கேதுவுக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராகு-கேதுவை தரிசனம் செய்தனர். இதனையடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.