ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . அந்த வகையில் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தில் வசந்த் ரவி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ராக்கி திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.