Categories
உலக செய்திகள்

“ராக்கெட் என்ஜின்கள் இனி உங்களுக்கு வழங்க மாட்டோம்”…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவுக்கும் ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான முடிவெடுத்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவிடம் இந்த போரினை நிறுத்துமாறு வலியுறுத்தியது. இதனை ஏற்க மறுத்ததால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் அந்நாடு அதிபர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச பரிமாற்றங்களுக்கான ‘ஸ்விப்ட்’ கூட்டமைப்பில் இருந்தும் ரஷ்ய வங்கிகளை நீக்கி உள்ளனர்.

இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் அமெரிக்காவுக்கும் ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது. “அமெரிக்காவுக்கு இன்று எனர்கோமாஷ் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சங்கத்தின் உற்பத்தியை (ராக்கெட் என்ஜின்கள்)  வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த வினியோகம் 1990களிலிருந்து நடைபெறுவதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முதலில் இது ஆர்.டி.180 எந்திரங்கள் ஆகும்.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட 24 என்ஜின்களின் பராமரிப்பு பணிகளையும் ரஷ்யா நிறுத்தப் போவதாக தெரிவித்தார். மேலும் ரஷ்யா மீது உள்ள பொருளாதார தடைகளின் அடிப்படையில் ரஷ்ய நாட்டின் ராக்கெட் மற்றும் விண்வெளி திட்டம் சரி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து இரட்டை பயன்பாட்டு செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது” என்று டிமிட்ரி ரோகோசின் கூறியுள்ளார்.

Categories

Tech |