Categories
உலக செய்திகள்

“ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விலை!”…. அரை கிலோ மீன் 3000 ரூபாயா…? வேதனைப்படும் மக்கள்….!!!

அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அரை கிலோ மீன், 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எனவே, கோழிக்கறியை வாங்கிவிட்டு வருவதாக ஒருவர் கூறியிருக்கிறார்.

அதேபோல அதிக பணம் கொடுத்து குறைவான அளவில் தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆப்பிள் ஒன்றின் விலை, 105 ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்று ஒருவர் கூறியிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நிலை பாதிப்படைந்து, சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |