‘ராக் வித் ராஜா” நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி விபவரி பாடியிருந்தார். அப்போது அனைவரும் பாட்டை மெய்மறந்து கேட்டனர். தனுஷும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தவுடன் இளையராஜா தனுஷை எழுந்திருக்கும்படி கூறினார் இளையராஜா. தனுஷ் எழுந்தவுடன் உனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறதா என்று கேட்க, தனுஷ் ஆமாம் என்று சொன்னார். அப்போது இளையராஜா ‘இந்தப் பாடலின் வெற்றிக்கு உன் மாமானார் தான் காரணம்” என்று கூறினார். இதற்கு தனுஷ் சிரித்தபடியே தலையை ஆட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.