இசையமைப்பாளர் இளையராஜா பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். தற்போது இருக்கும் காலங்களில் இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தி வருவதால் இளையராஜாவின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாட படுவதோடு பல குழுக்கள் அமைக்கபட்டு பாடல்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வப்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது அங்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது அதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு சிங்கப்பூரில் கச்சேரி நடத்தப்பட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இளையராஜா மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு மார்ச் மாதம் சென்னையில் ‘ராக் வித் ராஜா’ என்ற தலைப்பில் பிரமாண்டமான இசைக் கச்சேரி நடத்த இருக்கிறார்.