Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ராசிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!!

ராசிபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது.

இந்த மாரத்தானை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த மினி மாரத்தானானது புதுச்சத்திரம் வரை நடைபெற்றது. இதில் ஞானமணி கல்வி நிறுவனங்களின் இணைத்தலைவர் மதுவந்தி, தாளாளர் மாலா லீனா, முதன்மை நிர்வாகி பிரேம்குமார், மாணவ-மாணவிகள் என பல பங்கேற்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Categories

Tech |