Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்து சென்ற பெண்….. கைது செய்த போலீசார்….!!!!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு வந்து பாப்பம்மாளுக்கு கொடுத்துள்ளார்.

அதை குடித்த பாப்பம்மாள் மயக்கம் அடைந்ததை அடுத்து மல்லிகா மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கவரிங் செயினை மூதாட்டிக்கு அணிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். பின் மறுநாள் காலை பாப்பம்மாளின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது அவர் மயங்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்.

பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பார்த்து இது தன்னுடையது இல்லை எனவும் இது கவரிங் எனவும் கூறியதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் உண்மை தெரிய வந்தது. பின் போலீசார் மல்லிகாவை கைது செய்து அவரிடம் இருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை மீட்டார்கள்.

Categories

Tech |