நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாகரட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வெற்றிபெற்ற வேட்பாளார்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 1-வது வார்டில் த மகாலட்சுமி(அ.தி.மு.க.), 2-வது வார்டில் ந.சாரதி(தி.மு.க.), 3-வது வார்டில் அ.சர்மிளா(தி.மு.க.), 4-வது வார்டில் ந பழனிசாமி(வி.சி.க.), 5-வது வார்டில் ஸ்ரீ வித்யா பாஸ்கரன்(தி.மு.க.), 6-வடு வார்டில் சு.க.சரவணன்(தி.மு.க.), 7-வது வார்டில் செல்வராஜூ(தி.மு.க.) 8-வது வார்டில் சண்முகம்(தி.மு.க.) 9-வது வார்டில் பிரபாகரன்(தி.மு.க.), 10-வது வார்டில் ஆராயி(அ.தி.மு.க.), 11-வது வார்டில் தமிழரசி(தி.மு.க.), 12-வது வார்டில் சசிரேகா(சுயே), 13-வது வார்டில் தேவிபிரியா(தி.மு.க.) , 14-வது வார்டில் விநாயகமூர்த்தி(தி.மு.க.),
15-வது வார்டில் கவிதா சங்கர்(தி.மு.க.), 16-வது வார்டில் லலிதா(காங்கிரஸ்), 17-வது வார்டில் கே நிர்மலா(தி.மு.க.) , 18-வது வார்டில் யசோதா தினேஷ்குமார்(தி.மு.க.), 19-வது வார்டில் நடராஜன்(தி.மு.க.) , 20-வது வார்டில் ஜெயம்மாள் ரவிச்சந்திரன்(தி.மு.க.), 21-வது வார்டில் கோமதி ஆனந்தன்(தி.மு.க.) , 22-வது வார்டில் ஜெய்புன்னிஷா(தி.மு.க.) , 23-வது வார்டில் நாகேஸ்வரன்(தி.மு.க.) , 24-வது வார்டில் கலைமணி(தி.மு.க.) , 25-வது வார்டில் லதா(தி.மு.க.) , 26-வது வார்டில் நடராசன்(தி.மு.க.) , 27-வது வார்டில் கந்தசாமி(தி.மு.க.)