உங்களுக்கும் திருமதி சசிகலா விற்க்கும் சிறு நெருடல் இருப்பதாக, கருத்து வேறுபாடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வருகிறது இதுபற்றி கேட்டபோது, பதிலளித்த டிடிவி தினகரன் ,
சமூக வலைத்தளத்தில் சொல்வதெற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அரசியல் விமர்சகர்களுடைய நிறைய பேருடைய தரம் நமக்கு தெரியும். அதாவது சந்தர்ப்ப வாதத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ராஜதந்திரம் என்று சொல்கின்ற சில பேருடைய பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
சசிகலா சிறையில் இருந்து வரும் போது நான் சொன்னேன் நண்பர் ரஜினிகாந்த் என்னிடம் போன் பண்ணி அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார், அதன் பின் அவரிடம் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியதாக எங்க சித்தி சொல்லியிருக்கிறார்கள், அதுலதான் நேத்து தகவல் வந்தது அவரை போய் பார்த்துவிட்டு வந்து இருக்கிறார்கள். நகராட்சி தேர்தலில் நிச்சயமாக நாங்கள் போட்டியிடுவோம், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு, நிச்சயம் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.