ராஜநாகம் ஒன்று மற்றொரு ராஜநாகத்தை சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வனவிலங்குகள் சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். வனவிலங்கு மிக வித்தியாசமாக செய்யும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இவரது வழக்கம். எப்படி ஒரு கிங் கோப்ரா பாம்பு மற்றவை கிங் கோப்ரா பாம்பை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவதை நம்மால் காணமுடியும். பொதுவாக பாம்புகள் மற்ற விலங்குகளை தான் சாப்பிடும்.
ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவது மிகவும் அரிதானது. ஆனால் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது ராஜ நாகம் என்பது மிகவும் அரிதான ஒன்று. அதாவது கிங் கோப்ராவின் அறிவியல் பெயர் ஓபியோபாகஸ் ஹன்னா ஆகும். இதில் ஓபியோ என்றபது கிரேக்க வார்த்தையிலிருந்து மருவி வந்தது. ஹன்னா என்பது கிரேக்க கதையில் வரும் மரத்தின் பெயர். இந்த ட்விட் ஆனது மிகவும் வைரலாகி வருகிறது.