Categories
உலக செய்திகள்

ராஜபட்சவுக்கு நெருக்கடி… போராட்டத்தில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்…. தேவாலயங்கள் அறிவிப்பு…!!!!!!

இலங்கையில் ராஜபட்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச  தலைமையிலான அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை பதவி விலகியது.

மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று சுயமாக செயல்பட போவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே ராஜபட்ச அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபகட்ச  பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய தேசிய கத்தோலிக்க மையத்தின் இயக்குனர் சிரில் காமி பெர்னான்டோ,  ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு கத்தோலிக்க மையம் ஆதரவாக  அளிக்கின்றது.

இந்நிலையில்  நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டத்தில் கத்தோலிக்க இயக்குனர் பலர் ஏற்கனவே பங்கேற்றிருக்கின்றனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு இருக்கின்றோம். ஈஸ்டர் பண்டிகை முதல் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |