ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய நட்பு பாடல் ரிலீஸாகியுள்ளது .
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார் .
This Friendship day, witness the coming together of 2 powerful opposing forces – Ramaraju🔥& Bheem 🌊#Natpu Music Video: https://t.co/5MprVcd33Q@MMKeeravaani@anirudhofficial @itsvedhem @ItsAmitTrivedi @IAMVIJAYYESUDAS #YazinNizar@TSeries @LahariMusic #RRRMovie #Dosti #Priyam
— Lyca Productions (@LycaProductions) August 1, 2021
மேலும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நண்பர்கள் தினமான இன்று ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நட்பு’ பாடல் வெளியாகியுள்ளது. நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடலை ஐந்து மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடியிருக்கின்றனர். அதன்படி தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச் சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர். தற்போது இந்த அதிரடியான பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.