ராஜமவுலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படமானது ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத் திரைப்படமானது 500 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
படம் நன்றாக இருந்ததாகவும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த படத்தின் இன்டர்வல் சீன் சிறப்பாக இருந்ததாகவும் இந்திய சினிமாவில் இதுவரை இப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என கூறியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
முதல் பாதி பொறுமையாகவும் இடைவெளிக்கு பிறகு தான் சூடு பிடித்ததாகவும் பின்னணி இசை சொதப்பியும் கதைப்படி பார்த்தால் பாகுபலி விட சற்று குறைவுதான் என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு நெட்டிசன் ராஜமவுலியின் மேஜிக் மிஸ்சாகி இருப்பதாகவும் எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படம் திருப்திபடுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது பல கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.