இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே நாளில் ரூபாய் 250 கோடி வசூலித்தது. மேலும் வெளியான 3 நாட்களில் “ஆர் ஆர் ஆர்” உலக அளவில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோரின் நடிப்பை நடிகர்கள் போற்றி வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆலியா பட் சில நிமிடங்களுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆலியா பட், ராஜமௌலியின் மீது கோபத்தில் இருக்கிறாராம். இதைத்தொடர்ந்து ஆலியா பட் தனது இன்ஸ்டாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் குறித்து பகிர்ந்த அனைத்து பதிவுகளையும் நீக்கு ராஜமௌலியை பின்தொடரும் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றாராம். இச்சம்பவமானது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.