Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜராஜ சோழனும், பொன்னியின் செல்வனும் இதே மண்ணில் தான்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…..!!!!

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் நடிகர் பிரார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து இன்று காலை பார்த்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், தஞ்சை மண்ணுக்கும் இராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ராஜராஜசோழன் திரைப்படத்தை இதே மண்ணில் தான் நான் பார்த்தேன். அதை மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன். அதனைத் தொடர்ந்து நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய் விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வனின் நடித்து அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதே பெருமையாக பார்க்கிறேன்.

கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவலைக்கு இன்றளவு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்தாளர்களுக்கு தான் முதல் வெற்றி, அடுத்து மணிரத்தினம் இயக்கத்திற்கு. இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம்தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்க்க வந்தேன் என்பதை விட, இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக தான் வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |