Categories
சினிமா

“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரில்லை”…. நடிகர் கமல் ஸ்பீச்….!!!!

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் உலகம் முழுதும் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் ராஜ ராஜசோழன் பற்றி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்குள்ளானது. சினிமாவை அரசியல் மையப்படுத்த வேண்டியது முக்கியம் என தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் போன்றோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது கமல்ஹாசனிடம் வெற்றிமாறனின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதில்கூறிய கமல் “ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இல்லை. சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்கள் இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ஆகும். இங்கு மதங்களானது வெவ்வேறாக இருந்தது. அதை 8ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டுவந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை ஆகும். இத்திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு ஆகும். இங்குநாம் சரித்திரத்தை புனையவேண்டாம், திரிக்கவேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம் ” என்று அவர் கூறினார்.

Categories

Tech |