Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜவம்சம்” மற்றும் ”தள்ளிபோகாதே” ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…. காரணம் இதுதான்….!!

‘ராஜவம்சம்’ மற்றும் ‘தள்ளிபோகாதே’ படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுத பூஜை தினத்தன்று அரண்மனை3, ராஜவம்சம், தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் வெளியிடுவதாக இருந்தனர். ஆனால், தற்போது ”அரண்மனை3” மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு படங்களான ‘ராஜவம்சம்’ மற்றும்  ”தள்ளிப்போகாதே” ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர்.சியின் 'அரண்மனை 3' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | aranmanai 3 first look released - hindutamil.in

சுந்தர். சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜ வம்சம்’ மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப்போகாதே’ ஆகும். இந்த இரு படங்களின் வெளியீட்டுத் தேதியும் தற்போது ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, இந்த படத்தை வெளியிடுவதற்கு திரையரங்குகள் குறைவாக கிடைத்ததுதான் என்கின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ”டாக்டர்” படம் திரையரங்குளில் ஓடிக்கொண்டிருப்பதால், அரண்மனை 3 திரைப்படம் மீதமுள்ள திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, இந்த ”ராஜவம்சம்” மற்றும் ”தள்ளிப்போகாதே” படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளிவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புது வெளியீட்டு தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

Categories

Tech |