ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,971 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,456 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,252 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் 20,043 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.