Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஒரு எம்.எல்.ஏவின் விலை ரூ.15 கோடி – முதலமைச்சர் குற்றச்சாட்டு…!!

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஒரு எம்எல்ஏவின் விலை 15 கோடி ரூபாய் என்ற அளவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர்  திரு அசோக் கெலாட் எதிராக காங்கிரஸ் அதிருப்தி  தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால், துணை முதலமைச்சர் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால்  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி கட்சி கொறடா சட்டப்பேரவை சபாநாயகர்க்கு பரிந்துரை செய்தார். இதனை எதிர்த்து திரு பைலட் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே சச்சின் பைலட்  மூலம் தமது அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் திரு கெல்லாட் ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஒரு எம்எல்ஏவின் விலை 15 கோடி ரூபாய் என குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக ஒரு எம்எல்ஏவின் விலை 10 கோடியாக இருந்ததாகவும் வரும் 14ஆம் தேதி சட்டப்பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 15 கோடி ரூபாயாக பேரம்  அதிகரித்துள்ளதாகவும் திரு கெல்லாட் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |