Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கோர விபத்து…. 6 பேர் பலி, 25 பேர் காயம்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது வாகனம் ஒன்று மோதியதாக காவல் நிலைய ஆய்வாளர் கூறுகின்றார்.இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த இந்த விபத்து வருத்தம் அளிப்பதாகவும், துயரமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |