Categories
உலக செய்திகள்

ராஜஸ்தானில் விழுந்த பயிற்சி போர் விமானம்….. 2 விமானிகள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!

இந்திய விமானப் படைக்கு சொந்த மிக் -21 ரக பயிற்சி போர் விமான ராஜஸ்தான் மாநில பர்மா அருகில் நேற்று இரவு 9.10 மணிக்கு விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இரட்டை இருக்கை கொண்ட இந்த பயிற்சி போர் விமான விபத்து குறித்து விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தில் விமான படை வீரர்கள் இருவரை இழந்ததிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை சார்பிலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங, விமானப்படை தளபதி வி.ஆர். செளத்ரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டிருந்தார் என்று விமான படை வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்த ரஷ்ய தயாரிப்பு போர் விமானம் கடந்த 1960களில் தொடக்கத்தில் இந்திய விமான படையின் முதல் முறையாக சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை 200 விபத்துக்குள்ளாகியுள்ளது.

Categories

Tech |