Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 31-ம் தேதி முதல் சட்டப்பேரவையைக் கூட்ட பரிந்துரை

ராஜஸ்தான் மாநிலத்தில் 31ஆம் தேதி முதல் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார்.

 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம்  கடந்த 24 ஆம் தேதி அன்று கோரிக்கை விடுத்தார். அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனக்கூறி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டசபையை கூட்ட மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தரும் அழுத்தத்தின் காரணமாகவே ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட மறுப்பதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இதர மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க சட்டப்பேரவையை கூட்ட அசோக் கெலாட் ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த குறிப்பிடப்படவில்லை எனவும் தகவல்கள்      வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |