நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்ட ராஜஸ்தானி சேர்ந்த தையல் கடைக்காரரான கன்னையா லாலை அவரது கடையில் வைத்து கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அத்தாரி ஆகிய இருவரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த படுகொலை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இருவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டின் அடிப்படையாகக் கொண்ட தாவாத்-இ-இஸ்லாமிய என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அந்த நபர் 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கராச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ராஜஸ்தான் திரும்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த படுகொலை குறித்து இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பு இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற எந்த நோக்கங்களையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தானை நோக்கி விரலைக் காட்டி இந்தியா தங்கள் உள்நாட்டு பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டை கேவலப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சி இது. மக்களை தவறாக வழி நடத்தும் இத்தகைய முயற்சிகள், இந்தியாவிலோ அல்லது உலக அரங்கிலோ மக்களை தவறாக நடத்துவதில் வெற்றி பெறாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.