நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதியாகி உள்ளதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். இவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.