ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல இடங்களில் ரயில் தண்டவாளம் உடைந்து காணப்பட்டது. மேலும் இந்த பாலத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தகர்க்க முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு படையினர் டெட்டனேட்டர் போன்ற சில பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தியுள்ளனர். இந்த சதி திட்டத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புகள் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.