Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி…. டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்…. பந்து வீச்சு தேர்வு….!!!

IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா 2 தோல்வியுடனும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. IPL தொடரின் 11வது நாளான இன்று 13வது லீக் ஆட்டம் நடைபெறும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

Categories

Tech |