ராஜகண்ணு மனைவிக்கு உதவ வேண்டுமென்று சூரியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தியது. ராஜகண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட அவரது மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்று தரவும் முடிந்தது.
இதனை கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றியை எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். மேலும் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.