ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா மெகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா சீரியல்களின் மெகாசங்கமம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த இரண்டு சீரியல் நடிகர்களும், நடிகைகளும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியல்களின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா மெகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை படக்குழுவினர் அனைவரும் கேக் வேட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த சூப்பர் ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் முடிந்துவிட்டதே என ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.