Categories
மாநில செய்திகள்

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து…. “மின்கசிவு தான் காரணம்”….. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்து நடந்த கீழ்த் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு அதிக அளவில் புகைமூட்டம் செல்கிறது.. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பிரிவிலிருந்த நோயாளிகளை மீட்டு விட்டதாக சொல்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து என்பதால் அங்கு நோயாளிகள் யாரும் இல்லை என்று தெரிவித்தார்..

Categories

Tech |