ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறைகளை மீறல் எதுவும் நடந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.